உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசு இல்லாத தீபாவளி விழிப்புணர்வு முகாம்

மாசு இல்லாத தீபாவளி விழிப்புணர்வு முகாம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் 'மாசு இல்லாத தீபாவளி' என்ற தலைப்பில் பெண்கள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம், மத்திய அரசின் தேசிய தொழிலாளர் கல்வி வாரியம், துாய்மை இந்தியா திட்டம் மற்றும் ரோட்டரி சமுதாய குழு இணைந்து இயற்கையை பாதுகாக்கும் வகையில், 'மாசு இல்லாத தீபாவளி' என்ற தலைப்பில் மகளிர் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. ஒருங்கிணைப்பாளர் சரசு வரவேற்றார். முகாமை, தேசிய தொழிலாளர் கல்வி வாரியம், மண்டல இயக்குனர் செண்பகராஜன் துவக்கி வைத்து பேசுகையில், ''இயற்கை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து குழந்தை பருவத்தில் இருந்தே வருங்கால சந்ததிக்கு எடுத்துக் கூற வேண்டும்'' என்றார். தொடர்ந்து, 'சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு எனது பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் ஜவஹர்லால், பிரபாகரன், பயிற்சியாளர்கள், ரோட்டரி சமுதாய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை