உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீதியில் வீசப்படும் பாலித்தீன் கழிவு

வீதியில் வீசப்படும் பாலித்தீன் கழிவு

பொள்ளாச்சி; பாலித்தீன் கழிவுகளை வீதியில் வீசுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும் என, பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்கத்தினர், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கழிவுகள் ஒழிப்பில் மாற்று நடவடிக்கை தேவை. மட்கும், மக்காத குப்பை என, வகைப் பிரித்து அளிக்காததால், அரசின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.எனவே, அனைத்து பகுதிகளிலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை, அந்தந்த சில்லரை மளிகைக் கடை வாயிலாக திரும்ப பெற்று, மறு சுழற்சி செய்து, தார்ரோடு அமைக்க வேண்டும்.இதனால் ஏற்படும் செலவுகளை ஈடு செய்வதற்கு, பாலித்தீன் மீது அதிக வரி விதிக்க, சம்பந்தபட்ட அதிகாரிகளால் திட்டம் தயாரிக்க வேண்டும். பாலித்தீன் கழிவுகளை வீதியில் வீசுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ