மேலும் செய்திகள்
ஐயப்பசுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழா
10-Dec-2024
ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம்
03-Jan-2025
வால்பாறை; வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் கோவில்களில், பொங்கல்விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தை மாத பிறப்பையொட்டி, பொங்கல் பண்டிகை அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது களை கட்ட துவங்கி விட்டன.இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணியரும் கலந்து கொண்டு சிறப்பிப்பர்.இந்த ஆண்டு பொங்கல் திருவிழா வரும், 14ம் தேதி துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது.வால்பாறை அடுத்துள்ள கல்லார் எஸ்டேட் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 6ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை அடுத்துள்ள தோணிமுடி எஸ்டேட் 2ம் டிவிஷன் மாரியம்மன் கோவிலின், 46ம் ஆண்டு திருவிழா நேற்று முன் தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 13ம் தேதி இரவு கும்பம் பாலித்தல் நிகழ்ச்சியும், 14ம் தேதி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.வால்பாறை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட் மாரியம்மன் கோவிலின், 45ம் ஆண்டு திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், வரும் 14ம் தேதி இரவு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், வரும் 15ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடக்கிறது.வரும், 16ம் தேதி காலை மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மாலை, 3:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.வரும், 17ம் தேதி அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
10-Dec-2024
03-Jan-2025