உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள்

பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள்

கோவை : பொங்கல் விழாவை முன்னிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கணபதி புதுார் கிளைகள் சார்பில், மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா நேற்று நடந்தது.இதில், சிறுவர்களுக்கு பாட்டிலில் நீர் நிறைத்தல், மியூசிக்கல் சேர், இளைஞர்களுக்கு ஸ்லோ பைக் ரேஸ், பொதுமக்களுக்கு தலையணை மாற்றுதல், பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடந்தன.போட்டிகளில் சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். எப்போதும் பைக்கை வேகமாகவே ஓட்டி, பழகிய இளைஞர்கள் மெதுவாக ஓட்ட மிகவும் சிரமப்பட்டனர்.கோலப்போட்டிகளில், பெண்கள் பல்வேறு விதமான கோலங்களை போட்டு அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ