உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தபால் துறை விளையாட்டு போட்டி: கோவை வீரர் அணிக்கு வெற்றி

தபால் துறை விளையாட்டு போட்டி: கோவை வீரர் அணிக்கு வெற்றி

கோவை: குஜராத் மாநிலத்தில் நடந்த தபால் துறை விளையாட்டு போட்டியில், கோவை வீரர் பங்கேற்ற அணி, இரண்டாம் இடம் பிடித்தது. தபால் துறை விளையாட்டு வீரர்களுக்கு, அகில இந்திய அளவிலான தடகளம் மற்றும் சைக்கிளிங் போட்டி, குஜராத் மாநிலம் போர்பந்தரில், கடந்த 1ம் தேதி துவங்கி 3ம் தேதி வரை நடந்தது. சைக்கிளில் தனிநபர் டைம் ட்ரையல், 25 கி.மீ., பிரிவில், கேரள வீரர் முதலிடம், திருச்சியை சேர்ந்த தமிழ்வாணன் இரண்டாமிடம் பெற்றனர். ரோட் மாஸ் ஸ்பார்ட் 30 கி.மீ., பிரிவில், மதுரை தபால் துறையை சேர்ந்த பாஸ்கர் மூன்றாவது இடம் பெற்றார். நால்வர் குழுவாக பங்கேற்கக் கூடிய, டீம் டைம் ட்ரையல் 25 கி.மீ., பிரிவில், கோவை மத்திய அஞ்சலகத்தில் பணிபுரியும் போஸ்ட்மேன் முகமது ஆரிப், திருச்சி தமிழ்வாணன், மதுரையை சேர்ந்த பாஸ்கர், முருகன் ஆகியோர் கொண்ட அணி இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடம், கேரளா, மூன்றாவது இடம் மகாராஷ்டிரா பெற்றது குறிப்பிடத்தக்கது. தடகளம் பிரிவில், ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப், தமிழக அணி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி