உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 16ல் தபால் குறைகேட்பு கூட்டம்

16ல் தபால் குறைகேட்பு கூட்டம்

பொள்ளாச்சி; தபால் சேவை குறித்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் வரும், 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு, பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள, தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கு, தபால் சேவை குறித்த புகார்களை, பொதுமக்கள் கடிதம் வாயிலாக எழுதி அனுப்பலாம். வரும், 12ம் தேதிக்குள் கடிதம் வந்து சேர வேண்டும். கடிதத்தை, சாந்தினிபேகம், தபால் கண்காணிப்பாளர், பொள்ளாச்சி கோட்டம், பொள்ளாச்சி - 642001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடித உறையில், 'DAK ADALT' என தவறாமல் குறிப்பிட வேண்டும், என, தபால்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை