மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் பெயரில் ரூ.230 கோடி மோசடி
07-Jun-2025
கோவை: யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கோவை கோட்ட தபால் அலுவலகம் சார்பில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.கவுண்டம்பாளையம் மண்டல அலுவலகத்தில், கோவை மண்டல அலுவலக, தபால், ஆர்.எம்.எஸ்., பிரிவு, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஊழியர்கள், 150 பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர், ஆர்.எம்.எஸ்., கோவை பிரிவு கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு உட்பட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். ஊழியர்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வெள்ளலுார் தபால் நிலையத்தில், போஸ்ட் மாஸ்டர் தண்டாயுதபாணி, போஸ்ட்மேன் செல்வராஜ் உட்பட ஊழியர்கள், யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
07-Jun-2025