உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வணிக வளாக கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

வணிக வளாக கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

சூலுார்; சூலுார் பேரூராட்சி வணிக வளாக கடைகள் ஏலம், கவுன்சிலர்கள், வணிகர்கள் எதிர்ப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.சூலுார் பேரூராட்சியில் பழைய பஸ் ஸ்டாண்ட் இருந்த இடத்தில், புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இரு தளங்களில், தலா, 20 கடைகள் என, 40 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான ஏலம், நாளை நடப்பதாக இருந்தது. இக்கடைகளுக்கான வைப்பு தொகை, வாடகை மிக அதிகமாக உள்ளதாகவும், ஒரு வருட வாடகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டு அரசியல் கட்சியினர் மற்றும் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க.,- பா.ஜ., மற்றும் வணிகர்கள் வைப்புத்தொகை, வாடகை உள்ளிட்டவைகளை குறைக்க வேண்டும் எனவும், உள்ளூர் வணிகர்கள் பயன்பெறும் வகையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில், பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். தொகையை குறைக்க வேண்டும் என,தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை நடக்க இருந்த ஏலம், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !