உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விளாமரத்தூர் குடிநீர் திட்டத்துக்கு மின் இணைப்பு பணிகள் துவக்கம்

 விளாமரத்தூர் குடிநீர் திட்டத்துக்கு மின் இணைப்பு பணிகள் துவக்கம்

மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் நகராட்சி விளாமரத்தூர் குடிநீர் திட்டத்துக்கு, மின் இணைப்பு வழங்கும் பணி துவங்கியது. மேட்டுப்பாளையம் நகராட்சியின், குடிநீர் விரிவாக்க திட்ட பணிக்கு, தமிழக அரசு, 22.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கின. இதற்காக நெல்லித்துறை ஊராட்சி விளாமரத்தூரில், பவானி ஆற்றில் (இன்டெக்வெல்) தண்ணீரை உறிஞ்சி எடுக்கும், கிணறு வெட்டப்பட்டு உள்ளது. ஆற்றின் அருகே, 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி, கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தண்ணீரை கொண்டு வர, சாமண்ணா நீரேற்று நிலையம் வரை, குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், மின் இணைப்பு கிடைக்காமல் இருந்தது. நகராட்சி நிர்வாகம், மின்வாரியத்தில் அதற்கான கட்டணத்தை கட்டியது. பொங்கல் பண்டிகை முடிந்த பின், மின் வாரிய ஊழியர்கள், விளாமரத்தூர் குடிநீர் திட்டத்துக்கு மின் இணைப்பு வழங்க, உயரழுத்த மின்சார கம்பிகளை கம்பங்களில், பொருத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,' இரண்டு நாட்களில் அனைத்து பணிகளும் முடிந்து, மின் இணைப்பு வழங்கப்படும்' என்றனர். மின் இணைப்பு கிடைத்தவுடன், குடிநீர் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை