உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் கையெழுத்து இயக்கம் துவக்கம்

கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் கையெழுத்து இயக்கம் துவக்கம்

சோமனூர்: சட்ட பாதுகாப்புடன் கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் கையெழுத்து இயக்கத்தை துவக்கி உள்ளனர்.சட்ட பாதுகாப்புடன் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி தரக்கோரி, கடந்த, 30 நாட்களாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 11 விசைத்தறியாளர்கள் மூன்று நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தினமும், ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்பிரச்னை சட்டசபையிலும் எதிரொலித்தது. வேலை நிறுத்தம் காரணமாக, விசைத்தறி ஜவுளி தொழில் முடங்கியுள்ளது. துணி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கூலி உயர்வு கோரிக்கை நிறைவேற்ற கோரி, சோமனூர் உண்ணாவிரத பந்தலில் கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது. காடா துணியில் விசைத்தறியாளர்கள் கையெழுத்து இட்டனர். எம்.எல்.ஏக்கள் கந்தசாமி, அருண்குமார் ஆகியோர் தங்களது கையெழுத்துக்களை இட்டு, ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து எம்.எல்.ஏ., கந்தசாமி கூறுகையில், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காணவேண்டும். இல்லையென்றால், முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் போராட்டம் நடத்தப்படும், என்றார். சோமனூர் சங்க தலைவர் பூபதி கூறுகையில்,புதிய கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தும் வகையில் முதல்வருக்கும், நியாயமான கூலியை விசைத்தறியாளர்களுக்கு வழங்க வேண்டும், என, ஜவுளி உற்பத்தியாளர்களை வலியுறுத்தியும் கையெழுத்து இயக்கத்தை சோமனூரில் துவக்கி உள்ளோம். அரசின் கவனத்தை ஈர்க்க, மற்ற பகுதிகளிலும் கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை