உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோழி குஞ்சுகள் வளர்க்கும் முறைகள் குறித்து பயிற்சி

கோழி குஞ்சுகள் வளர்க்கும் முறைகள் குறித்து பயிற்சி

மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையத்தில் நாட்டின கோழிக் குஞ்சுகள் வளர்க்கும் முறைகள் குறித்தான ஒரு நாள் பயிற்சி நேற்று நடந்தது.கோவை மாவட்ட கால்நடை துறை சார்பில், ஏழ்மையில் உள்ள பெண் பயனாளிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் நான்கு வார, 40 நாட்டின கோழிக் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன.இத்திட்டத்திற்கு, காரமடை ஒன்றிய ஊராட்சியில் உள்ள கிராமங்களில் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கோழிக் குஞ்சுகள் வளர்க்கும் முறைகள் குறித்தான ஒரு நாள் பயிற்சி, மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனை அலுவலகத்தில், கோவை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை, மண்டல இணை இயக்குனர் ராஜாங்கம் தலைமையில் நேற்று நடந்தது.இதில், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலை பேராசிரியர் ஆறுமுகம் பங்கேற்று, கோழிக் குஞ்சுகளுக்கு வழங்கப்படும் தீவனம், குஞ்சுகளை தாக்கும் நோய்கள், அதை எவ்வாறு தடுப்பது, தடுப்பூசி போடுவது மற்றும் கொட்டகை அமைப்பு குறித்து விளக்கி கூறி பயிற்சி அளித்தார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை