மேலும் செய்திகள்
முதிய தம்பதி தவறவிட்ட 5 சவரன் நகை மீட்பு
17-Aug-2025
கோவை : பயணி தவற விட்ட, 50 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸ்காரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், கோவை ரயில்வே ஸ்டேஷன் முதல் நடைமேடையில், நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூர் செல்லும் வெஸ்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு, 11:30 மணிக்கு வந்து சென்றது. பயணியர் அனைவரும் சென்ற பின், பணியில் இருந்த ரயில்வே போலீஸ்காரர் மணிகண்டன், நடைமேடையில் கிடந்த கைப்பை ஒன்றை கண்டார். அதில், 50 சவரன் நகை, 11,000 ரூபாய், மொபைல் போன் இருந்தன. சிறிது நேரத்தில், கைப்பையில் இருந்த மொபைல் போனுக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், தன்னை கோவை சாரதா மில் ரோட்டை சேர்ந்த ரவிக்குமார், 53, என்றும், கைப்பையை தவற விட்டதாக தெரிவித்தார். அவரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைத்து, உரிய ஆவணங்களை சரிபார்த்த பின், பணம், நகை அடங்கிய கைப்பை ஒப்படைக்கப்பட்டது. போலீஸ்காரர், மணிகண்டனை பாராட்டி, ரயில்வே பாதுகாப்பு படை கமாண்டன்ட் சவுரப்குமார் 1,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கினார்.
17-Aug-2025