உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாரியம்மன் தேர்த்திருவிழாவுக்கு முன்கூட்டிய திட்டமிடல் அவசியம்

மாரியம்மன் தேர்த்திருவிழாவுக்கு முன்கூட்டிய திட்டமிடல் அவசியம்

பொள்ளாச்சி; கோவிலுக்கு வரும் பக்தர்கள், முறையாக தங்களது வாகனங்களை நிறுத்தும் வகையில், பார்க்கிங் வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சியில், ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், நடப்பாண்டு கோவில் தேர்த்திருவிழா, கடந்த 11ம் தேதி ேநான்பு சாட்டப்பட்டது.கடந்த 18 ம் தேதி கம்பம் நடுதலை தொடர்ந்து, தினமும் அபிேஷக ஆராதனை நடத்தப்படுகிறது. அதிகப்படியான பக்தர்கள், கொடிமரத்திற்கு மஞ்சள் தண்ணீர் ஊற்ற வருகின்றனர்.ஆனால், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், கோவில் ஒட்டிய பகுதிகளில் தாறுமாறாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால், நகர வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதேபோல, கூட்டத்தின் நடுவே இருசக்கர வாகனங்கள் இயக்கப்படும் போது, சிறு விபத்துகளும் ஏற்டுகிறது. இதனை தடுக்கும் வகையில், கோவில் ஒட்டிய பகுதி மற்றும் வீதிகள், பள்ளி மைதானத்தை தேர்வு செய்து, வாகனங்களை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.மக்கள் கூறியதாவது:கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால், பிறர், தரிசனம் முடித்து விட்டு, வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாமல் திணறுகின்றனர்.முறையின்றி நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்தும் பாதிக்கிறது. வாகனங்களை முறையாக நிறுத்தும் வகையில் ஏதேனும் ஒரு பகுதியை 'பார்க்கிங்' அமைக்க தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை