உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிவன் கோவில் கும்பாபிஷேக விழா; ஏற்பாடுகள் தீவிரம்

சிவன் கோவில் கும்பாபிஷேக விழா; ஏற்பாடுகள் தீவிரம்

சூலுார்; சூலுாரில் பழமைவாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேக விழா பணிகள் தீவிரமடைந்துள்ளன.சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீ தையல் நாயகி உடனமர் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில், 1300 ஆண்டுகள் பழமையானது. திருமண தடை நீக்கும், தீராத நோய் தீர்க்கும் ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன.வரும், மே 4 ம்தேதி காலை, 8:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழாவுக்கான, யாகசாலை அமைத்தல், கோபுரம், விமானங்களுக்கு சாரம் அமைத்தல் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, காரிய சித்தி மகா கணபதி ஹோமத்துடன், அஷ்டலட்சுமி ஹோமம், நவகிரஹக ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து மாலை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இன்று மாலை புனித நீர் கலசங்கள் நிறுவப்பட்டு, யாக சாலை பூஜைகள் துவங்குகின்றன. நான்கு கால ஹோமம் முடிந்து, மே 4 ம்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை