மேலும் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்து
12-Jun-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கான, ஆயத்த கூட்டம் நடந்தது.பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.இதற்காக, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஆயத்த கூட்டம், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரசேன் தலைமை வகித்தார்.தொடர்ந்து, குறுமைய அளவிலான போட்டிகள் எந்தந்த பள்ளிகள் பொறுப்பேற்று நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது.அதில், கோவை வருவாய் மாவட்ட போட்டிகளை நடத்த மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப்பள்ளி முடிவு செய்யப்பட்டுள்ளது.கோட்டூர் குறுமைய அளவிலான போட்டிகளை சேத்துமடை அரசு மேல்நிலைப்பள்ளியும், கிழக்கு குறுமைய அளவிலான போட்டிகளை சங்கவி மெட்ரிக் பள்ளியும், மேற்கு குறுமைய அளவிலான போட்டிகளை சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் பள்ளி மற்றும் மதுக்கரை குறுமைய போட்டிகளை ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியும் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டதாக உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.கூட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதையும் கவனியுங்க!
உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'விளையாட்டு போட்டி நடத்தும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போதிய மருத்துவ வசதிகளை கட்டாயம் ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. பெரும்பாலும், போட்டி நடத்தும் இடத்தில், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படுவதில்லை.மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் காயம் ஏற்படும்போது, உடனடியாக சிகிச்சை அளிக்க, போதிய மருத்துவ உபகரணங்களுடன், முதலுதவி சிகிச்சை அளிக்கும் விதமாக, தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்த வேண்டும். போதிய நிழல் வசதி ஏற்படுத்த வேண்டும். இதனை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்,' என்றனர்.
12-Jun-2025