உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம்

பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம்

கோ வை மாவட்டத்தில், உணவுப் பொருட்கள் தயாரிக்கும் புதிய நிறுவனங்களை உருவாக்கும் வகையில், இம்மாவட்டத்தில் விளையும் வேளாண் பொருட்களைக்கொண்டு குறு நிறுவனங்களைத் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பழச்சாறு, பழக்கூழ், காய்கறி பழங்களை பதப்படுத்துதல், அரிசி ஆலை, உலர் மாவு, ஈர மாவு, பொடி வகைகள், தின்பண்டங்கள், சமையல் எண்ணெய், கடலை மிட்டாய், ஊறுகாய், காபிக் கொட்டை அரைத்தல், இறைச்சி, தேன் என, உணவு பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு, கால்நடைத் தீவன உற்பத்தி போன்ற தொழில்களை இத்திட்டத்தின் கீழ் துவங்கலாம். ஏற்கனவே உள்ள இத்தொழில்களையும் விரிவுபடுத்தலாம். தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சி வழங்குவதுடன், திட்ட அறிக்கை தயாரிக்கவும் வழிகாட்டப்படும். வங்கிகள் வாயிலாக மானியத்துடன் கடனுதவிக்கு பரிந்துரை செய்யப்படும். ரூ. 1 கோடி வரையிலான திட்ட மதிப்பீட்டில் தொழில் துவங்கலாம். திட்டத்தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தமது பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிக் கடன். அரசு 35 சதவீதம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கும். இத்திட்டங்களைப் பயன்படுத்தி, தொழில்முனைவோராக மாறி, மாவட்டம் மற்றும் மாநில தொழில் வளர்ச்சியில் பங்கெடுக்க, கோவை மாவட்ட தொழில் மையம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை