மத்திய கூட்டுறவு வங்கியில் அரசு முதன்மை செயலர் ஆய்வு
கோவை; கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலர் சத்யப்பிரதா சாஹூ ஆய்வு மேற்கொண்டார்.கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தின் இணைப்பதிவாளர் பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கு, கைவினைஞர்களுக்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, திருநங்கைகளுக்கு கடன், வாகனக் கடன், வீடு கட்டும் கடன் என, 17 பேருக்கு, 76 லட்சம் ரூபாய், அரசு முதன்மை செயலர் வழங்கினார்.துணைப்பதிவாளர் ஆனந்தன், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணைப்பதிவாளர் வடிவேலு, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் தியாகு, பொது மேலாளர் ஆனந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.