மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்திய அசாம் பெண்கள் கைது
24-Jan-2025
கோவை; ரயிலில் கஞ்சா கடத்தி வந்த, வடமாநில பெண் சிறையிலடைக்கப்பட்டார். அவரிடமிருந்து, 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், ரோந்து சென்றனர். அப்போது பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பெண் ஒருவர், கையில் மூட்டையுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்தார்.அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அவர் பையில், ரூ.7 லட்சம் மதிப்பிலான 14 கிலோ, 120 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து, கடத்தி வந்தது தெரிந்தது.விசாரணையில், அவர் பீகாரை சேர்ந்த மின்டா தேவி, 45 என்பதும், பாட்னாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடந்தி வந்ததும் தெரிந்தது.வழக்கு பதிந்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து, 14 கிலோ, 120 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா பொட்டலமிட வைத்திருந்த, 124 கவர்களை பறிமுதல் செய்தனர்.
24-Jan-2025