உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாம்பு கடித்ததாக சிறைக்காவலர் மருத்துவமனையில் அனுமதி

பாம்பு கடித்ததாக சிறைக்காவலர் மருத்துவமனையில் அனுமதி

கோவை; பாம்பு கடித்ததாக, கோவை மத்திய சிறை காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மத்திய சிறை வளாகம், 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சிறை வளாகத்தில் புல் வளர்ந்து காணப்படுகிறது. சிறையில், தர்மபுரி மாவட்டம், கடத்தூர் காந்தி நகரை சேர்ந்த பிரசாந்த், 28, கோவை மத்திய சிறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் மாலை, சிறை வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நடந்து செல்லும் போது திடீரென அவரது காலில் ஏதோ ஊர்வது போல் தோன்றியது. பாம்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து அகன்றார். தொடர்ந்து அவருக்கு படபடப்பு ஏற்பட்டது. அங்கு பாம்பு எதுவும் தென்படவில்லை. இதையடுத்து பிரசாந்த் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி