மேலும் செய்திகள்
பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்
02-Sep-2024
கோவை : மண்டல அளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 28ம் தேதி கோவையில்நடக்கிறது.கோவை மண்டலத்துக்கு உட்பட்ட, கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், ஈரோடு ஆகிய மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பில் மண்டல அளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 28ம் தேதி, கோவை சித்தாபுதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 8:00 மணியளவில் நடக்கிறது.இதில், 50க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்துக்கான பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யஉள்ளனர்.எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், பொறியியல் மாணவர்கள் என, அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம்.பங்கேற்கும் மனுதாரர்கள், சுய விபரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு, உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும்.விபரங்களுக்கு மனுதாரர்கள், 0422 - 2642388, 94990 55937 ஆகிய எண்களிலும், வேலையளிப்போர், 78456 64918, 63815 90373 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். முகாமில், மனுதாரர்கள் அதிகளவில் பங்கேற்று பயனடைய வேண்டும் என, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
02-Sep-2024