உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

கோவை; சிறுவாணி ரோடு, தீத்திபாளையத்தில் அமைந்துள்ள சி.எம்.சி., சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. சி.எம்.சி., கல்வி நிறுவனங்களின் தலைவர் நாதன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக, சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பில் நடுவராக இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா பங்கேற்று, விளையாட்டின் முக்கியத்துவம், மாணவர்கள் எதிர்காலத்தை திட்டமிடல் போன்றவை குறித்து, எடுத்துரைத்தார்.பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில், மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.சி.எம்.சி., சர்வதேச பள்ளியின் செயலாளர் லீமா ரோஸ், முதல்வர் பிரேமலதா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை