போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
வால்பாறை; வால்பாறையில், கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.வால்பாறை திருஇருதய ஆரம்ப பள்ளி மாணவர்கள், கலைத்திருவிழா மற்றும் மாவட்ட அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.கலைத்திருவிழா போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் தர்ஷிகா (களிமண் உருவங்கள் செய்தல்), ஜனா (திருக்குறள் ஒப்புவித்தல்), கவுதம் (தேசபக்தி பாடல்), தன்ஷிகா, லக் ஷிதா, ரோகிணி, காவியா, சுவேதா, ஹரிணி, ஹர்ஷினி (பரதநாட்டியம்) போட்டிகளில் வெற்றி பெற்றனர்.அவர்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியை மேகலா மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.