உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழைப்பால் முன்னேறலாம்; மாணவர்களுக்கு அறிவுரை

உழைப்பால் முன்னேறலாம்; மாணவர்களுக்கு அறிவுரை

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாவது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மாரிமுத்து தலைமை வகித்தார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: தற்கால சூழலில் அறம் பிறழாமல் எவ்வாறு வாழ்வது என்பதை ஆராய்ந்து, தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டு நலனில் அக்கறையுள்ள குடிமக்களாக வளர்வதும், நாட்டின் முன்னேற்றத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும், இந்த நாட்டுக்குச் செய்யும் அடிப்படை கடமையாகும். உழைப்பு ஒன்றுதான் உங்கள் முன்னேற்றத்திற்கான ஒரே வழி. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இளங்கலை, முதுகலை முடித்த, 650க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி