உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்தில்லா கோவை உருவாக்கும் திட்டம்: தன்னார்வலர்களுடன் போலீசார் ஆலோசனை

விபத்தில்லா கோவை உருவாக்கும் திட்டம்: தன்னார்வலர்களுடன் போலீசார் ஆலோசனை

கோவை: 'விபத்தில்லா கோவை'யை உருவாக்கும் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், கோவையில் நடந்தது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர போலீசார், நம்ம கோவை, உயிர் அமைப்பு ஆகியவை சார்பில், 'நான் உயிர் காவலன்' என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 10 லட்சம் மக்களை, சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க வைக்கும் வகையில், அக்., 6 முதல் 12 வரை, 'விபத்தில்லா கோவை' திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் பேசுகையில், ''சாலை பாதுகாப்பு அனைவருக்குமானது. கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும்; சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது பொதுமக்களுக்கு தெரிந்திருந்தாலும், தொடர்ந்து பின்பற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுப்பதோடு, சாலையில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்,'' என்றார். 'ராக்' அமைப்பு ரவீந்திரன், அபார்ட்மென்ட் அசோசியேஷன் சார்பில் செந்தில்குமார், உயிர் அமைப்பு சார்பில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், நம்ம கோவை அமைப்பின் உறுப்பினர்கள், கோவை அபார்ட்மென்ட் அசோசியேசன் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை