உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆழியாறில் சுற்றுலா மேம்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்க கருத்துரு

ஆழியாறில் சுற்றுலா மேம்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்க கருத்துரு

பொள்ளாச்சி; ஆழியாறு பகுதியில், சுற்றுலாவை மேம்படுத்த, ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரிடம் நீர்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு அணை, பூங்கா, மீன் பண்ணை, கவியருவி உள்ளிட்டவை உள்ளன. இவற்றை சுற்றி பார்க்க, வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.ஆழியாறு அணையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாலத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, அதிகாரிகளிடம், அணைப்பகுதியில் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆழியாறு அணை கடந்த, 1962ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்குள்ள பூங்கா புனரமைப்பு, செயற்கை நீருற்று, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், படகு இல்லம் அமைத்து படகு சவாரி, மாதிரி உருவங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும்.அணைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர் வாகனங்கள் நிறுத்த, 'பார்க்கிங்' வசதி, கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணியரில் முதியவர்கள், அணை மேல்பகுதிக்கு செல்ல, 'எக்ஸ்லேட்டர்' வசதி வேண்டுமென கோரப்பட்டது.அணைப்பகுதியில், நீச்சல் குளம் அமைக்க வேண்டும். இதற்காக, 15 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அமைச்சரிடம் கருத்துரு கொடுக்கப்பட்டது. முதல்வரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை