உள்ளூர் செய்திகள்

 சாதகம் சந்தோஷம்

மேட்டுப்பாளையம்: ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்குவதை போல், அகவிலைப்படி மற்றும் நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர் பொதுநல சங்கம் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அகவிலைப்படி வழங்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கத்தினர், மேட்டுப்பாளையத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். கிளை கவுரவத் தலைவர் சுப்பிரமணியன், தலைவர் அருணாச்சலம், செயலாளர் பழனிசாமி, தலைமை சங்க பொதுச் செயலாளர் மாணிக்கம், துணை செயலாளர் ரூபன், நிர்வாகி தங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !