உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பறவைகளை பாதுகாப்பது முக்கிய கடமை பறக்க பிறந்தது நிகழ்ச்சியில் வேண்டுகோள்

பறவைகளை பாதுகாப்பது முக்கிய கடமை பறக்க பிறந்தது நிகழ்ச்சியில் வேண்டுகோள்

கோவை : ''பறவைகளை பாதுகாத்து, அடுத்த தலைமுறையிடம் சேர்க்க வேண்டியது, நம் கடமை,'' என்று, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்தார்.'சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை தலைமை தபால் நிலையத்தில், சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. கோவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் வெளியிட, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் பெற்றுக் கொண்டார்.கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் பேசியதாவது:பறவைகளின் சுதந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'பறக்க பிறந்தது' பிரசாரத்தின் ஒரு பகுதியாக, இந்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. கிளிகளை வாங்குவதும், விற்பதும், வீட்டில் வைத்து வளர்ப்பதும் தண்டனைக்குரிய குற்றம்.கூண்டில் வைத்து அடைக்கப்பட்டிருக்கும் கிளிகளை பார்த்து அடையும் சந்தோஷத்தை விட, இயற்கையான சூழலில் அதன் வாழ்விடத்திலேயே சென்று, பல வண்ணங்களில் சுதந்திரமாக பறந்து திரிவதை பார்த்து அனுபவிக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது.இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''தபால் துறை மேற்கொண்டு வரும் இதுபோன்ற பல நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது,'' என்றார்.முதுநிலை அஞ்சல் அதிகாரி காசி விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை