மேலும் செய்திகள்
குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி
24-Jun-2025
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே குருந்தமலையில் மிகவும் பழமையான, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த கோவில் தேர் சிதிலம் அடைந்ததால், நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வாயிலாக, 60 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தேர் செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவிலில் தை மாதம் தேரோட்டம் நடைபெற்றது. தேர் நிறுத்தும் இடத்தில், தேருக்கு பாதுகாப்பு ஷெட் நிரந்தரமாக அமைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. கோவை சேர்ந்த நன்கொடையாளர் ஒருவர் இந்த ஷெட்டை அமைத்து தருவதாக உறுதியளித்தார். தேர் ஷெட் கட்டுமான பணிகள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்றன. கோவில் செயல் அலுவலர் வனிதா கூறுகையில், ''குழந்தை வேலாயுத சுவாமி கோவில், புதிய தேருக்கு நன்கொடையாளர் வாயிலாக, நிரந்தர செட் அமைக்கப்பட்டது. இரும்பு ஆங்கில்களில், 38 அடி உயரம், 22 அடி அகலம், 21 அடி நீளத்தில், தேருக்கு பாதுகாப்பு ஷெட் அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
24-Jun-2025