உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரச்னைக்கு தீர்வு காணாததால் குப்பையை பரிசளிக்கும் போராட்டம்

பிரச்னைக்கு தீர்வு காணாததால் குப்பையை பரிசளிக்கும் போராட்டம்

கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தினமும், 2 டன்னுக்கும் மேல் குப்பை சேர்கிறது. திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த, 2023ல் இருந்து குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மாதத்துக்கு, அதிகபட்சமாக, 19 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், குப்பை மட்டும் அகற்றப்படுவதில்லை, என, புகார்கள் எழுந்தன. இப்பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, கடந்த, ஜன., மாதம், கவுன்சிலர் தங்கமணி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.இதையடுத்து, தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், அதே நிறுவனம் தான் தற்போதும் குப்பை அள்ளும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதனால் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.இந்நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், குப்பை பிரச்னைக்கு தீர்வு காண கோரி, நகராட்சி கமிஷனர், தலைவர் மற்றும் சுகாதார ஆய்வாளருக்கு குப்பையை பரிசளிக்கும் போராட்டத்தை பொதுமக்கள் சார்பில், இன்று நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ