உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியிருப்பு பகுதியில் மதுக்கடை; எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

குடியிருப்பு பகுதியில் மதுக்கடை; எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கோவை; மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. சிங்காநல்லூர், எஸ்.ஐ. எச்.எஸ்., காலனியில் கோமதி நகரில், 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் கருத்து எதையும் கேட்காமல், புதிய பார் உடன் கூடிய நவீன உணவகம் அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கு ஏற்கனவே ஒரு அரசு டாஸ்மாக் உள்ளது. அங்கு மது குடிக்க வருபவர்களால் பெண்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் மீண்டும் புதிதாக பார் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, கோமதி நகர், சிவலிங்கபுரம், சூர்யா நகர்,கண்ணன் நகர்,செந்தில் நகர், சின்னசாமி லே அவுட், சி டி.சி காலனி, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் பார் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க கூடாது என வலியுறுத்தினர். அப்பகுதியினர் கூறுகையில்,'மதுக்குடிக்க வருபவர்கள் தங்களுக்குள் பிரச்னையில் ஈடுபடுவதுடன் அவ்வழியாக செல்வோரிடமும் தகராறில் ஈடுபடுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அரசு எங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்கக்கூடாது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை