உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையில் கைப்பந்து வலை கட்டி மறியல் சாலையின் குறுக்கே கைப்பந்து வலை கட்டி மறியல்

சாலையில் கைப்பந்து வலை கட்டி மறியல் சாலையின் குறுக்கே கைப்பந்து வலை கட்டி மறியல்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனூரில் விளையாட்டு மைதானம் வேண்டி சாலை மறியல் நடந்தது. இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவனூர் பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த காலி இடத்தில் அப்பகுதி இளைஞர்கள் விளையாடி வந்தனர். தற்போது, அப்பகுதியில் நாயக்கன்பாளையம் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு விட்டது. தற்போது, கோவனூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாட இடம் இன்றி தவித்து வருகின்றனர்.தங்களுக்கு விளையாட மைதானம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக்கூறி, நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி கோவனூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நடுரோட்டில் கைப்பந்துக்கான வலையை கட்டி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி, எஸ்.ஐ., ரவி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட இளைஞர்களுடன் பேச்சு நடத்தினர்.விளையாட்டு மைதானம் அமைக்க, அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தவுடன், இளைஞர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.இதனால் கோவனூர், பெரியநாயக்கன்பாளையம் இடையே போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !