உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சி நிர்வாகத்துக்கு குப்பையை பரிசளித்து போராட்டம்

நகராட்சி நிர்வாகத்துக்கு குப்பையை பரிசளித்து போராட்டம்

கருமத்தம்பட்டி; குப்பை பிரச்னைக்கு தீர்வு காண கோரி, கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகத்துக்கு, குப்பையை பரிசளித்து நூதன போராட்டம் நடந்தது.கோவை மாவட்டத்தின் கிழக்கு நுழைவாயிலாக இருப்பது கருமத்தம்பட்டி நகராட்சி, 27 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக, நகராட்சி பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மாதந்தோறும், 19 லட்சம் ருபாய் வரை நகராட்சி பணம் வழங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக குப்பை முறையாக அகற்றப்படாததால், பல இடங்களில் குப்பை மலை போல் தேங்கி சுகாதாரம் சீர்கெட்டுள்ளது. குப்பை பிரச்னைக்கு தீர்வு காண கோரி, தமிழக விவசாயிகள்பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில், நகராட்சி கமிஷனர், தலைவர், சுகாதார ஆய்வாளருக்கு குப்பை பரிசளிக்கும் நூதன போராட்டம் நேற்று நடந்தது.இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி பிரபாகரன் கூறுகையில், குப்பை முறையாக அகற்றப்படாததால், நகராட்சி முழுக்க சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண கோரி நூதன போராட்டத்தை நடத்தினோம். விரைந்து தீர்வு காண்பதாக, நிர்வாகம் உறுதியளித்துள்ளது, என்றார்.நகராட்சி தலைவர் மனோகரன் கூறுகையில், தினமும், 4 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அவற்றை தரம் பிரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்து, குப்பை பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்படும். மேலும் நகராட்சி பொது இடங்களில், வெளி ஆட்கள் குப்பை கொட்டுவதை தக்க ஆதாரத்துடன் நிரூபித்தால் பரிசு தொகை வழங்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ