உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இசைவாணியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

இசைவாணியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்; அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்கம் சார்பில் பாடகி இசைவாணி, ரஞ்சித்தை கைது செய்ய கோரி, ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு மேட்டுப்பாளையம் அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். உமாசங்கர் முன்னிலை வகித்தார்.இதில், சாக்த ஸ்ரீ வாராஹி மணிகண்ட சுவாமி பேசுகையில், ''சபரிமலையில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 12 கோடி பேர் அதிகமாக வந்துள்ளனர். ஐயப்பனை தவறாக பாடிய இசைவாணிக்கு கண்டிப்பாக அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அவரவர் வழியில் அவர்கள் செல்கிறார்கள். மற்றவர்களை சீண்டாதீர்கள்,'' என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சரோஜினி மாதாஜி, மேட்டுப்பாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி