உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் ஸ்டேஷன் முன் காத்திருப்பு போராட்டம்

போலீஸ் ஸ்டேஷன் முன் காத்திருப்பு போராட்டம்

சூலுார்; கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸ் ஸ்டேஷன் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.சுல்தான்பேட்டை அடுத்த வஞ்சிபுரத்தை சேர்ந்தவர் வேலு மந்திராஜலம், 47. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர்.இவர் கடந்த, மார்ச் 20 ம்தேதி காரில் சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் தகாத வார்த்தை பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசில் வேலு மந்திராஜலம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த, 13ம் தேதி அதே நபர் மீண்டும் தகராறு செய்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதன் பின்னரும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது.இதையடுத்து, மாநில துணை செயலாளர் கணேசன் தலைமையில், ஏராளமான விவசாயிகள், சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுடன் டி.எஸ்.பி., குமரேசன்( பொறுப்பு) பேச்சுவார்த்தை நடத்தினார். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு, விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !