உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., பார்மஸி பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி., பார்மஸி பட்டமளிப்பு விழா

கோவை: பி.எஸ்.ஜி. அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும், பி.எஸ்.ஜி., பார்மஸி கல்லுாரியின் 19வது பட்டமளிப்பு விழா, பி.எஸ்.ஜி., - ஐ.எம்.எஸ்.ஆர்.ஆடிட்டோரியத்தில் நடந்தது. பி.எஸ்.ஜி. அண்ட் சன்ஸ் அறக்கட்டளைகளின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் விழாவுக்கு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர், ஆக்ஸெலன்ட் பார்மா சயின்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சம்பத்குமார் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவித்தார். இதில், சுரேகா, ஷிவ் சுந்தர் என இரண்டு சிறந்த மாணவர்கள், முதல் மதிப்பெண் பெற்ற 17 பட்டதாரிகள் உட்பட 161 பேர், பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பி.எஸ்.ஜி., பார்மசி கல்லுாரி முதல்வர் ராமநாதன், துணை முதல்வர் சங்கர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை