உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

 ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் பிரதான ரோடுகளில் ஒன்றாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன், கடைகள் அமைந்துள்ளன. இந்த ரோட்டில் சந்தை அமைந்துள்ளதால், போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் இந்த ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் தாராளமாக உள்ளது. இதன் காரணமாக, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும், வாகன ஓட்டுனர்கள், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பல முறை நகராட்சிக்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, நகராட்சியினரும், போலீசாரும் இணைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ