உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொது குடிநீர் குழாய் துண்டிப்பு; கிராம மக்கள் சாலை மறியல்

பொது குடிநீர் குழாய் துண்டிப்பு; கிராம மக்கள் சாலை மறியல்

அன்னுார்; பொது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.அன்னுார், சத்தி சாலையில் அய்யப்ப ரெட்டி புதூர் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு காலனியில் இருந்த, பொது குடிநீர் குழாய் கடந்த ஞாயிறன்று துண்டிக்கப்பட்டது. இதனால் காலனி மக்கள் ஆவேசம் அடைந்தனர். நேற்று கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் அய்யப்ப ரெட்டி புதூர் பிரிவில் அமர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.போலீசாரிடம், 'நாங்கள் கூலி தொழிலாளிகள். எங்களது வருமானம் உணவுக்கு தான் சரியாக உள்ளது. எங்களிடம் வீட்டு குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் செலுத்துங்கள், என்கின்றனர். எங்களுக்கு பொதுக் குழாய் போதும்,' என்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிடும் படி செய்தனர்.இதையடுத்து வந்த ஒன்றிய அதிகாரிகள்,' நாளை (இன்று) பொது குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்,' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !