மேலும் செய்திகள்
கோவை மாநகராட்சியில் துணை கமிஷனர்கள் பொறுப்பேற்பு
07-Jan-2025
கோவை; கோவை மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் இல்லாமல் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். மேயர், கமிஷனர் மற்றும் துறை தலைவர்கள் பங்கேற்பது வழக்கம்.கடந்த இரு வாரங்களாக, கூட்டம் நடத்தவில்லை. நேற்று நடத்தப்பட்டது. ஆனால், மேயர் ரங்கநாயகி அலுவல் நிமித்தமாக சென்னை சென்றிருந்த தால் பங்கேற்கவில்லை.கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர்கள் குமரேசன், சுல்தானா ஆகியோர் தலைமையில், குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. 68 மனுக்கள் பெறப்பட்டன.
07-Jan-2025