மாநகராட்சியில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம்
கோவை, ; டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், சுகாதாரம், கல்வி, குடிநீர், வரியினங்கள் உள்ளிட்டவை சார்ந்த தேவைகள், புகார்களுக்கு தீர்வு காணுமாறு, மாநகராட்சி மேயர், கமிஷனரிடம் பொது மக்கள் மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று காலை, 11:00 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.