மேலும் செய்திகள்
இலவச மனைப்பட்டா புதுப்பிக்க கோரி மனு
27-Jun-2025
கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.கோவை - திருச்சி சாலை ஹைவேஸ் காலனியை சேர்ந்த, 96 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, உடனடியாக மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க, அவர்கள் வலியுறுத்தினர். வீரபாண்டி அண்ணா நகரை சேர்ந்த மக்கள், இலவச மனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மத்திய அரசு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கும் வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.விவசாயிகளை பாதிக்கும் இத்திட்டத்தை, கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
27-Jun-2025