உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் வராததால் பொதுமக்கள் தவிப்பு

குடிநீர் வராததால் பொதுமக்கள் தவிப்பு

அன்னுார்; அவிநாசியில் இருந்து கருவலூர், அன்னுார், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு 38 கி.மீ., தொலைவிற்கு நான்கு வழி சாலை அமைக்கும் பணி ஐந்து மாதங்களாக நடைபெற்று வருகிறது.இதில் அன்னுார் பகுதியில் சாலை அமைக்க, 2 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்படுகிறது. மரங்களை வெட்டி, அகற்றும் போதும், சாலை அமைக்கும் போதும், பிரதான குழாய் மற்றும் கிளை குழாய்கள் உடைந்தன.இதுகுறித்து ஜீவா நகர் மக்கள் கூறுகையில்,' 25 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் நீண்ட தொலைவு சென்று நீண்ட நேரம் காத்திருந்து குடிநீர் எடுத்து வர வேண்டி உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !