உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி

குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி

அன்னுார்; திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் துவங்கி கருவலூர், அன்னுார், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழி சாலை அமைக்கப்படுகிறது. இந்நிலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும்போது ஏற்கனவே உள்ள சாலையிலிருந்து கூடுதலாக இருபுறமும் 16 அடி அகலத்திற்கு புதிதாக ஒன்றரை அடி ஆழத்திற்கு குழி தோண்டி கற்கள் நிரப்பி சாலை அமைக்கின்றனர். இதனால் குடிநீர் குழாய், தொலைபேசி கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டு விட்டன. இதனால் மேட்டுப்பாளையம் சாலையில் 2 கி.மீ., தொலைவிற்கு ஜீவா நகர் வரை கடந்த 40 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் ஜீவா நகர், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் நாகமாபுதூர் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி