உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று ஆண்டுக்குப் பின் பொது குடிநீர் குழாய் திறப்பு

மூன்று ஆண்டுக்குப் பின் பொது குடிநீர் குழாய் திறப்பு

அன்னுார்; மூன்று ஆண்டுகளுக்குப் பின், குருக்கிளையம்பாளையத்தில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் முதலாம் குடிநீர் திட்டத்தில், குருக்கிளையம்பாளையத்தில், தினமும் 16 மணி நேரம் பவானி ஆற்று நீர் வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம், 2022ல் கைவிடப்பட்டதால் பொதுக்குழாய்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து குருக்கிளையம்பாளையத்தில் மீண்டும் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என, மக்கள் மூன்று ஆண்டுகளாக கோரி வந்தனர். பொதுமக்கள் முயற்சியால், திருப்பூர் நான்காம் குடிநீர் திட்டத்தில் குருக்கிளையம்பாளையத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வழியில் பொது குடிநீர் குழாய் புதிதாக அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மூன்றாண்டுக்குப் பின் பொது குடிநீர் குழாய் அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊருக்குள் அமைத்தால், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு கி.மீ., துாரம் சென்று குடிநீர் பிடிக்க வேண்டி உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !