உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கள் நலப் பணியாளர்கள் பணி கோரி ஆர்ப்பாட்டம் 

மக்கள் நலப் பணியாளர்கள் பணி கோரி ஆர்ப்பாட்டம் 

பொள்ளாச்சி : ஐகோர்ட் உத்தரவு அடிப்படையில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி தலைமை வகித்தார். அதில், பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமன ஆணை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.கடந்த 2011, நவ, 9ம் தேதி முதல் இறந்து போன மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் குடும்பங்களுக்கு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, 5 லட்சம் நிவாரணத் தொகையும், வாரிசு வேலையும் வழங்க வேண்டும்.பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தர்மராஜ், வீரமுத்து, யாசின், மதுக்கரை ஒன்றிய பொறுப்பாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி