உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெருமாள் கோவில்களில் புரட்டாசி பூஜை

பெருமாள் கோவில்களில் புரட்டாசி பூஜை

சூலுார்:சூலுார் வட்டார பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை பூஜை கோலாகலமாக நடந்தது. பு ரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டாம் பாளையம் ஊராட்சி கோதபாளையத்தில் உள்ள ஸ்ரீ ரங்க ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. இதேபோல், கணியூர் ஸ்ரீ தேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் மற்றும் அனுமந்த ராய சுவாமி கோவிலில் சிறப்பு, அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கரவழி மாதப்பூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக, அலங்கார பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வெங்கிட்டாபுரம் காரண பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !