உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்து தவிர்க்க டிவைடர் வையுங்க!

விபத்து தவிர்க்க டிவைடர் வையுங்க!

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வடசித்தூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே, டிவைடர் வைக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு, வடசித்தூர் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டில் வளைவு பகுதிகள் அதிகம் இருப்பதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்கள் பயணிக்க சிரமப்படுகின்றனர். மேலும், இந்த ரோட்டில் சமத்துவபுரம் அருகே டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு மதியம் முதல் இரவு வரை, ரோட்டில் வாகனங்கள் வருவதை கவனிக்காமல், மதுக்கடைக்கு வந்து செல்பவர்களால், வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி விபத்தும் நடக்கிறது.எனவே, இப்பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்க, டிவைடர்கள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ