உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உடல் உறுப்பு தானத்திற்கு கியூ.ஆர்.,கோடு அறிமுகம்

உடல் உறுப்பு தானத்திற்கு கியூ.ஆர்.,கோடு அறிமுகம்

கோவை; ஆவாரம்பாளையத்தில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி,ஒரு லட்சம் உடல் உறுப்பு தானதாரர்களை, கியூ.ஆர்., கோடு வழியாக பதிவு செய்யும் திட்டத்தைத் தொடங்கி, செயல்படுத்தி வருகிறது.இதனொரு பகுதியாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தக்சின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பிர் சிங் பரார், உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு பதிவு செய்யும் கியூ.ஆர்., கோடை அறிமுகம் செய்து வைத்தார். அதை எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் குறித்து பேராசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி