உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.ஐ.டி., கல்லுாரியில் தரநிர்ணய கற்றல் மையம்

கே.ஐ.டி., கல்லுாரியில் தரநிர்ணய கற்றல் மையம்

கோவை: கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும்இந்திய தரநிலைகள் பணியகம் (பி.ஐ.எஸ்.,) சார்பில், தரவுகள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் கற்றல் மையத்தின் துவக்க விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கோவை இந்திய தரநிலைகள் பணியகத்தின் மூத்த இயக்குனர் பவானி,மையத்தை துவக்கி வைத்தார். தரம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் தரநிலைகள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றன,தரநிலைப்படுத்தலின் மதிப்பு மற்றும் அது தேசிய வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கிறது என்பது குறித்து அவர் விளக்கமளித்தார். கல்லுாரிமுதல்வர் ராமசாமி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் இயக்குனர் சாந்தி,பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 1,700க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை