உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

கோவை பல்வேறு சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, வெள்ளிக்கிழமைகளில் இயங்கும் கொச்சுவேலி - சாலிமர்(06081) வாராந்திர சிறப்பு ரயில் வரும், 20 முதல் ஜன., 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமைகளில் இயங்கும் சாலிமர் - கொச்சுவேலி(06082) வாராந்திர சிறப்பு ரயில், வரும், 23 முதல், ஜன., 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமைகளில் இயங்கும், போத்தனுார் - பரூணி(06055) வாராந்திர ரயில் வரும், 21 முதல் ஜன., 25 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல், செவ்வாயக்கிழமைகளில் இயக்கும் பரூணி - போத்தனுார்(06056) வாராந்திர ரயில், வரும், 24 முதல், ஜன., 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.போத்தனுார் - பரூணி(06055) வாராந்திர ரயில், சனிக்கிழமைகளில் இனி, காலை, 11:45 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், மவுலா அலி - கொல்லம் - மவுலா அலி(07149/07150) வாராந்திர சிறப்பு ரயில்கள் இனி கோவை சந்திப்புக்கு பதிலாக, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை