உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரயில்வே மேம்பாட்டு பணிகள் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

 ரயில்வே மேம்பாட்டு பணிகள் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவை: பீளமேடு - வடகோவை ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் - மங்களூர்(16159) எக்ஸ்பிரஸ் மற்றும் திப்ருகர் - கன்னியாகுமரி(22504) விவேக் எக்ஸ்பிரஸ், நாளை இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் பீளமேடு, வடகோவை, கோவை சந்திப்பு ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நிற்காது.அதேபோல், ஆலப்புழா - தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ் நாளை மற்றும், 14ம் தேதி இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் இயக்கப்படும். மூன்று ரயில்களும் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ